Keerai recipes and health benefits

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரையின் அற்புத நன்மைகள்

பல நூறு கீரை வகைகள் நமது நாட்டில் உள்ளது. ஆனால் நாம் பயன்படுத்துவது மிகச் சிலவே. கீரைகளின் நன்மைகள் அற்புதமானது. தினமும் ஒரு கீரை சாப்பிட்டால் நூறு வயது வரை எந்த நோயும் உங்களை தாக்காது.

கீரைகளை பொதுவாக எண்ணெயில் வதக்குவதைவிட வேக வைத்தே சாப்பிட வேண்டும். அதிலுள்ள சத்துக்கல் எளிதில் அழிந்துவிடும் என்பதால் மூடி வைத்து சமைக்கக் கூடாது. 8 நிமிடங்கள் மேல் இலை வேகத் தேவையில்லை தண்டுகளை வேக வைக்க பத்து நிமிடங்கள் போதும்.

கீரைகள் நோய்களை தடுக்கவும் உபயோகமாகிறது. எளிதில் கிடைக்கக் கூடிய சிலவகை கீரைகளின் நன்மைகளையும், சத்துக்களையும் இங்கே காண்போம்.

அரைக் கீரை :

இந்த கீரையில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன. பலவீனத்தைப் போக்கும். இந்தக் கீரையைப் பழுப்பு இலைகள் இல்லாமல் சுத்தமாக ஆய்ந்து கழுவிவிட்டு, உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அரைக் கீரையில் வைட்டமின் ஏ,சி இரண்டும் அதிக அளவில் இருக்கின்றன. புரதச் சத்து, கால்சியம், நார்ச் சத்துக்களும் அதிக அளவில் இருக்கின்றன.

இதனை அடிக்கடி உபயோகித்து வந்தால் உடலின் எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சியை பெறும். தேக பலமும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கி குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். இதயத்திற்கு வலிமையை தரும். உடல் நலக் குறைவினால் துன்பப்படுபவர்கள் இந்தக் கீரையை கடைந்தும், மிளகு ரசத்தையும் உணவில் சேர்த்து கொண்டால் சத்தான உணவாகும்.

சிறுகீரை:

வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் கீரைகளில் இந்த சிறு கீரையும் ஒன்று. சுமார் இருபது செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. இக்கீரை மெல்லிய தோற்றமுடையது. இக்கீரை மருந்துகளின் வீரியத்தை குறைக்க கூடியது.

நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. இதனால், தீவிரமான மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.

இந்த கீரையில் சுண்ணாம்புசத்து, இரும்புசத்து, நீர்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுசத்து, வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.

Siru keerai sadham

 

Siru keerai masiyal

பசலைக் கீரை :

இரும்புச் சத்து நிறைந்த இச்சாறு எளிதில் ஜீரணம் ஆகும். ஹீமோகுளோபினைக் கூட்டும். அமிலத்தன்மை குறைகிறது. மூல வியாதி, உடல் சூடு, மூலச்சூடு, மலக்கட்டு நீங்கும். மூத்திரக்கடுப்பு, சிறுநீர் வியாதிகள் விலகும். கண்கள் சத்துக்கள் பெறுகின்றன. உடல் பருமன், தொப்பையைக் குறைக்கின்றன. உடல் பளபளப்புக்கு பசலைக்கீரை சாறு பருகலாம்.

மணத்தக்காளிக் கீரை :

மணத்தக்காளி கீரையை உணவுடன் சேர்த்து உண்ண உடம்பு குளிர்ச்சி அடையும். வாரம் ஒரு முறை இக்கீரையை உண்டுவர, கடுமையான உழைப்பு காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்றியைப் போக்கலாம்.

இதயத்திற்கு வலிமை ஏற்றும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெற உதவும். கண்பார்வையும் தெளிவு பெறும். வயிற்றுநோய், வயிறு பெறுக்கம், வாய்புத் தொல்லை உடையவர்கள், வாரம் இருமுறை மணத் தக்காளிக் கீரையை சமைத்து உண்டு வர, நோய் கட்டுபட்டு குணமாகும்.

Manathakali keerai poriyal

 

Manathakali keerai masiyal in Kalchatti | Cooking in soapstone cookware | home remedy for ulcer

 

முருங்கைக் கீரை :

முருங்கைக் கீரையில் விட்டமின், புரோட்டின், கால்சியம், மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்பு போன்ற முக்கிய சத்துக்கள் நிரம்பப் பெற்றிருக்கின்றன. முருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன.

வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்ணுக்கு ஒளியூட்டக்கூடியது முருங்கைக்கீரை. முருங்கைக் கீரையை வாங்கி நன்றாக ஆய்ந்தெடுத்து பருப்பு சேர்த்தோ, சேர்க்கா மலோ சமைத்துச் சாப்பிட, தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

Murungai keerai sambhar 

 

Murungai keerai poriyal

 

Murungai keerai Kootu

 

Murungai keerai poricha kulambu

 

வெந்தயக் கீரை :

வெந்தய கீரை மலச்சிக்கலை போக்குகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இந்த கீரையில நார் சத்து, இரும்புச் சத்து,கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. வெந்தய கீரை தோல் நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது. இது இரத்தத்தை பெருக்கி உடலை வலிமையாக்கும்.

வயிற்றுப் புண், வாய்வு தொல்லை ஆகியவற்றை போக்கும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தும். சர்க்கரை வியாதிக்கு மிகவும் நன்மைகளைத் தரும்.

முடக்கறுத்தான்

முடக்கறுத்தான் கீரை சமீப வருடங்களாக மூட்டு வலிக்கு உதவும் மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.முடக்கறுத்தான் இட்லி முடக்கறுத்தான் தோசை, முடக்கறுத்தான் துவையல், முடக்கறுத்தான் போண்டா, முடக்கறுத்தான் பிரியாணி என அவரவர்க்கு பிடித்த வகையில் முடக்கறுத்தான் சமைத்து எடுத்துகொள்கிறார்கள். முடக்கறுத்தான் கீரைகளின் நன்மைகள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

முடக்கறுத்தான் தற்போது அதிகமாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. முடக்கத்தான் காய்கள் பலூன் போன்று இருக்கும் இதை அழுத்தினால் பட்டாசு போன்று சத்தம் வரும் அதனால் இது பட்டாசுக்காய் என்றும் சிறுவர்கள் மத்தியில் அழைக்கபடுகிறது .ஆனால் பெயருக்கேற்றப்படி இது முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால் இது முடக்கறுத்தான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

Mudakathan keerai soup

முள்ளங்கி வாங்கிட்டு இலையை கீழ தூக்கி போடாதீங்க… அதுல இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்காம்…

மற்ற கீரை வகைகள் போலவே முள்ளங்கி கீரையிலும் ஊட்டச்சத்துகள் மிக அதிகம். முள்ளங்கி காயில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதோ அதைவிட அதிகமாகவே முள்ளங்கி கீரையில் அதிக அளவில் இருக்கிறது. அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.

முள்ளங்கி கீரையில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் A,B,C போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. முள்ளங்கியில் இருப்பதைவிட‌ ஆறு மடங்கு முள்ளங்கி கீரையில் அதிகமாக வைட்டமின் C இருக்கிறது.

Radish green dal curry

கீரை உணவின் எண்ணிலடங்கா மருத்துவ பயன்களை பார்க்கலாம்.

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

2. உடல் எடைக் குறைப்பில் முக்கியப்பங்கு

3. உடல் நீரேற்றத்தில் முக்கியப்பங்கு

About Poornima 192 Articles
Hello Friends, I am Poornima Senthil Kumar an IT professional and mother of 2 little angels. My passion for cooking is endless and this blog and Cookingmypassion youtube channel is my dream. I post day to day recipes and also some famous and interesting recipes in my blog and my channel. I love to shoot food preparations videos and also love to capture an eye-catching and mouth-watering pics of my recipes. Me and my husband both love to cook new and innovative recipes. And I am blessed to get my hubby as a supportive and acting partner in our cooking videos. We both love cooking and tasting food as much as we love each other lol... Cooking healthy food, eating happily and staying active without any illness till the last breath is the way of my life. And I would be very happy to know my friends are too happy and healthy with my recipes. No rules, Don't be afraid to do whatever you want. Cooking doesn't have to have rules. I don't like it that way. - Masaharu Morimoto Thank you.

Be the first to comment

Leave a Reply